தேனிசைத் தென்றல் தேவா அவர்களின் DEWA 2.0 பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி!

தமிழ்நாட்டின் பிரபல இசை அமைப்பாளரும் பாடகரும் ஆன தேனிசைத் தென்றல் தேவா அவர்களின் DEWA 2.0 பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 8 தேதி நடைபெற உள்ளது.

தேனிசைத் தென்றல் தேவா அவர்கள், பல பிரபலமான பாடல்களுக்கு இசை அமைத்தது மட்டுமல்லாமல், தனது காந்தக் குரலில் பாடியும் உள்ளார்.

வருகின்ற 08.08.2026 நாளன்று ஜொகூர் பருவில் உள்ள EduCity Sports Complex இன் நடைபெற உள்ளது.
இந்த பிரபாண்டமான இசை நிகழ்ச்சிக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபலமான பாடகர்களும் இடம் பெற்றுள்ளனர் என்று ஏற்பாட்டளர்கள் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.

பிரபலமான நடன கலைஞர்களும் இதில் இடம் பெற்றுள்ளனர். இந்த ஆண்டின் ஒரு மாபெரும் நிகழ்ச்சிக்காக தேவா 2.0 நிகழ்ச்சி நடைபெறும் என்பதில் எந்த ஒரு ஐயப்பாடும் கிடையாது.

இந்தக் கலை நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகளை முன் பதிவு செய்து கொள்ள greatticket.my என்று தளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். முன்பதிவு செய்து கொள்பவர்களுக்கு சிறப்பு சலுகைகளும் இடம் பெற்றுள்ளது.

பிரபலங்களை வைத்து பிரமாண்டமாக ஏற்பாடு செய்திருக்கும் இந்த நிகழ்ச்சியை, நாட்டின் பிரபல நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான RS1 Productions ஏற்பாடு செய்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இறுதிக்கட்ட ஏமாற்றத்தை தவிர்க்க
முன்கூட்டியே நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொள்கின்றனர்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular