ரயானி ஏர் 2.0 விமானம் புதிய நிர்வாகத்தின் கீழ் 2027 ஆம் ஆண்டில் தொடங்கம்!

வி.எம்.சாமி

புதிய நிர்வாகத்தின் கீழ் ரயானி ஏர் 2.0 விமானம் தமது வணிகத்தை கிளந்தான் கோத்தா பாருவில் இருந்து செயல்படும் என்று முகநூல் வாயிலாக தெரிவித்தது.
எனவே ரயானி ஏர் 2.0 விமான நிருவனம் தமது வணிக அலுவலகத்தை கோத்தா பாருவிலும் விமான செயல்பாட்டு மையத்தை சுல்தான் இஸ்மாயில் பேட்ரா விமான நிலையத்தில் இருந்து செயல்படும் என்று அறிவித்தது.
ரயானி ஏர் 2.0 அதன் புதிய தலைவராக டத்தோ முகமட் ஜமில் முஹமட் என்பவரை நியமனம் செய்துள்ளது என்பதோடு நிர்வாகத்தில் விரிவான அனுபவம் கொண்ட ஒரு முன்னாள் அரசு ஊழியர் ஆவர். அத்துடன் தேசிய சுற்றுலா பிரமுகராகவும் ‘ டி கெனாலி ஹாலிடேஸ் எஸ்.டி.என், பி.எச்.டி. ஆகிய நிறுவனத்தின் தலைவராக அறியப்படுகிறார்.
ரயானி ஏர் விமான சேவை கிளந்தானில் இருந்து செயல்படுவதால் நிர்வாகம் மற்றும் இதர ஊழியர்களுக்கான தேர்வு தற்போது நடைபெற்று வருவதாகவும் சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு அதன் செயல்பாட்டிற்கான தகவல்களை அவ்வப்போது தெரிவித்து வருவதாக நிர்வாகம் கூறியது.
2027 ஆம் ஆண்டில் தமது சிறகை விரிக்க உள்ளதாகவும் ஷரியாவுக்கு இணக்கமான ஹஜ் மற்றும் உம்ராவுக்குமான சிறப்பு விமான சேவையை வழங்க திட்டமிட்டுள்ளது.
100 சதவீதம் பூமிபுத்ரா பங்குதாரர்களுக்கு சொந்தமான இந்த விமான நிருவனம் ரயானி ஏர் 2.0 என்று அறிமுகப்படுத்தப்படும். ஏர் பஸ் A330-300 ரக விமானத்தை சேவையில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில் இதில் 290 பயணிகள் அமரக்கூடிய வசதிகளை பெற்றதாகும்.
முன்பதாக 2015 – 2016 ஆம் ஆண்டிலும் பயன்படுத்தப்பட்ட போயிங் 737-400 ரக விமானம் 160 பயணிகள் மட்டுமே பயணக்க முடியும் என்ற நிலையில் இருந்தது.
அதே நேரத்தில் கடந்த கால விமான செயல்பாடுகள் நிறுத்தத்தின் போது ஏற்ப்பட்ட சம்பவங்கள் தங்களுக்கு ஒரு பாடம் என்பதோடு அத்துடன் விமான ரத்துக்கள் மற்றும் நிலுவையில் உள்ள பணத்தை திருப்பி செலுத்தும் நிலை தங்களுக்கு ஒரு பெரிய சுமையைக இருந்தது.
அத்துடன் அந்த நேரத்தில் அதன் செயல்பாடுகள் பழைய நிர்வாகத்தின் கீழ் இருந்தது. அதன் பின்னர் படிப்படியாக அனைத்து பிரச்சினைகள் ஒரு முடிவுக்கு கொண்டு வந்துள்ளது என்று முகநூலல் கூறியது.
மீண்டும் இரண்டாவது முறையாக தனது சிறகை வரிக்க திட்டமிட்டுள்ள ரயானி ஏர் விமானம் அரசாங்கத்திற்கும் பொது மக்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular