
வி.எம்.சாமி
கே.எல்.ஐ.ஏ விமான நிலையம் மற்றும் சிப்பாங் ஆகிய பகுதிகளில் தனித்தனியாக நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் 12 பேரை போலீசார் கைது செய்யப்பட்டதுடன் 33.4 மில்லியன் வெள்ளி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் மாதம் 28 ஆம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 21 ஆம் தேதி வரை போலீசார் நடத்திய சோதனையில் ஒரு மலேசியர், நான்கு வெளிநாட்டு ஆண்கள் மற்றும் ஏழு வெளிநாட்டு பெண்கள் கைது செய்யப்பட்டதாகவும் 671 பொட்டலங்கள் கொண்ட 418 கிலே எடைக் கொண்ட போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாக சிலாங்கூர் மாநில போலீஸ் படைத்தலைவர் டத்தோ ஷாஜெலி கஹார் தெரிவித்தார்.
போதைப்பொருள் கடத்தல் காரர்கள் வேலை வாங்கி தருவதாக கூறி சம்பந்தப்பட்டவர்களை சுற்றுலா பயண திட்டத்தின் வழி கொண்டு வரப்பட்ட போது கடத்தல் காரர்கள் கொடுத்த பயணப் பெட்டியில் போதைப்பொருளை கொண்டு வந்தத போது கைது செய்ததாக அவர் கூறினார்.
இச்சம்பவம் தொடர்பாக உள்ளுரை சேர்ந்த நபர் போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கு மற்றும் போதைப பொருளை விநியோகிக்கும் இடைத்தரகராக செயல்பட்டதாகவும் அவர் 2026 ஆம் ஆண்டு முதல் கடத்தல் செயலில் ஈடுபட்டு வந்ததாக அவர் செய்தியாளர்களிடம தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பாக இரண்டு கார்கள், வெளிநாட்டு நாணயங்கள் உள்ளிட்ட 37,700 வெள்ளி மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் செய்தியாளர்களிடம கூறினார்.