
வி.எம்.சாமி
2027 ஆம் ஆண்டு ஹரிராயா பெருநாள் காலகட்டத்தின் போது ஈ.சி.ஆர்.எல் எனப்படும் கிழக்கு கடற்கரை பகுதிக்கான ரயில் திட்டம் கோம்பாக்கிலிருந்து கிளந்தான் வரை தொடங்க உள்ளது.
இதன் ஒருங்கிணைந்த சோதனை ஓட்டம் இம்மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை பயணிகள் வகுப்பு, சரக்கு இன்ஜின்கள் மற்றும் ரயில் செயல்திறன் போன்றவற்றை மதிப்பிடும் வகையில் அதன் சோதனைகள் நடத்தப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் அந்தோனி லோக் தெரிவித்தார்.
கிளந்தான், திரங்கானு, பகாங் மற்றும் சிலாங்கூர் ஆகிய மாநிலங்களில் ஈ.சி.ஆர்.எல் ரயில் திட்டம் 95.08 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும் தற்போது கோம்பாக் நிலையம் வரை 98.96 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில் அதன் முழுமையாக செயல்பாடுகள் முழுமையாக நிறைவடையும் என்று அமைச்சர் கூறினார்.
இதன் மூலம் 2027ஆம் ஆண்டு ஹரிராயா பெருநாளை கொண்டாட கிளந்தான் திரங்கானு பகாங் ஆகிய பகுதிகளுக்கு செல்பவர்கள் இந்த ஈ.சி.ஆர்.எல் ரயில் பயணம் மிகவும் மகிழ்ச்சி மிக்கதாக அமையும் என்றார்.
கிளந்தான் கோம்பாக் ஆகிய ரயில் வழித்தடத்தில் 10 மின் துணை நிலையங்களில் இருந்து மின்சாரம் இயக்கப்படுவதால் இத்திட்டம் தற்போது அமைப்புக்களை ஒருங்கிணைத்தல் மற்றும் சோதனை செய்தல் ஆகியவற்றின் மீது கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
665 கிலோ மீட்டர் தூரமுள்ள இந்த ஈ.சி.ஆர்.எல் ரயில் தண்டவாள வடிவமைப்பு, சிக்கல் அமைப்பு மற்றும் மேல்நிலை தொடர்பாக ஆய்வு செய்து வருவதுடன் அதோ வேளையில் கோம்பாக்கிலிருந்து போர்ட்கிள்ளான் வரையிலான திட்டம் ஜனவரி மாதம் 2028 ஆம் ஆண்டி முழுமையாக நிறைவடைந்து பயணத்தை தொடங்கும் என்று அமைச்சர் கூறினார்.

