பந்திங் நகரில் அப்பச்சி உணவகம்; பாரம்பரிய உணவின் அடையாளம்!

வி.எம்.சாமி

பாரம்பரிய உணவுகள் உடல் நலத்திற்கு மிகவும் சார்ந்தவையாகும். அவை இயற்கை முறையில் விளைந்த தானியங்கள் மற்றும் காய்கறிகளைக் கொண்டு சேமிக்கப்படுகின்றன.
உணவே மருந்து மருந்தோ உணவு   எனும் கட்டத்தில் இன்றைய வாழ்க்கையை நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதற்கான ஒரு ஆரோக்கியமான முறையில் பாரம்பரிய உணவு,  பலகாரம், குடிநீர் பானங்களை உடனுக்குடன் தயாரித்து தரும் வகையில் புதிதாக பந்திங் நகரில் உதயமானது அப்பச்சி உணவகம்.

பந்திங் ஜாலான் பூங்கா பெக்கான் டி.என்.பி அலுவலகத்திற்கு முன் புறம் புதிதாக இந்திய கலாச்சார அம்சங்களை கவரும் வகையில் இந்த அப்பச்சி உணவகம் திறப்பு விழா கண்டது.
பந்திங் நகரில் மருத்துவ துறையில் நன்கு பிரசித்திபெற்றராக கமலநாதன் அவர்களின் பெற்றோர்களான செல்லையா அப்பச்சி சிம்பாங் மோரீப் பகுதியில் பிறந்து வளர்ந்துள்ளனர்.


தமது பெற்றோர் காலாமானாலும் இன்று வரை தமது தாயாரின் அன்றைய பாரம்பரிய உணவு முறை மனதை விட்டு முறையைவில்லை. இந்த பாரம்பரிய உணவை அனைவரும் அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தமது மகன் கேல்வின் முயற்சியில் இந்த உணவகத்தை திறந்ததாக செ.கமலநாதன் கூறினார்.
மதியம் 2-00 மணி முதல் இரவு 10-00 மணிவரை மட்டுமே திறக்கப்படும் இந்த உணவகம் இந்தியர்களின் பாரம்பரிய சுவையை நிவர்த்தி செய்யும் என்றார் அவர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular