
வி.எம்.சாமி
சீனா குடியரசு நாட்டின் முன்னாள் பிரதமர் ஜூ ரோங்ஜி தமது 97வது வயதில் காலமானதை தொடர்ந்து அவரது குடும்பத்தாருக்கு மலேசிய நாட்டு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார்.
1990 ஆம் ஆண்டில மலேசியாவிற்கும் சீனா நாட்டிற்கும் இடையிலான பொருளாதாரம் மற்றும் நிதி உறவுகளை தானும் ஜூவும் இணைந்து பணியாற்றியதாகவும் அந்தக் காலகட்டத்தின் கட்டமைப்பு இன்றுவரை இரு நாடுகளின் உருவுக்கு அடித்தளமாக திகழந்து வருவதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நினைவு கூர்ந்தார்.
சீனாவின் பொருளாதார மாற்றத்தின் மாபெரும் சிற்பிகளில் ஒருவராகவும் ஒரு நல்ல நண்பராகவும் ஜூவை வர்ணித்த டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஒரு நல்ல நண்பரை இழந்து விட்டதாகவும் என்றும் அவரது புகழ் மேலோங்கி இருக்கும் என்று தமது முகநூலில் பிரதமர் பதிவிட்டிருந்தார்.

