
வி.எம்.சாமி
சிலாங்கூர் : காஜாங் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் அதிரடி சோதனை நடத்திய குடிநுழைவுத் துறையினர் 248 அன்னிய நாட்டை சேர்ந்தவர்களை கைது செய்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட குடிநுழைவுத் துறையினர் தேசிய பதிவு இலாகாவுடன் இணைந்து ஓப்ஸ் சசார் எனும் பெயரில் நேற்று இரவு 10-30 மணிக்கு இந்த அதிரடி சோதனையை காஜாங் சுதரமாஸ் அடுக்கு மாடியில் நடத்தியுள்ளனர்.
இந்த சோதனையையில் கைது செய்யப்பட்டவர்கள் மியன்மார், வங்காளதேசம் ஆகிய நாட்டை சேர்ந்தவர்கள் என்றும் அவர்களில் ஒரு சிலர் ஐக்கிய நாட்டுன் உயர் ஆணையர் (UNHCR) அட்டையை வைத்திருந்தாக குடி நுழைவுத்துறை தலைமை இயக்குனர் டத்தோ ஜகாரியா ஷாபான் தெரிவித்தார்.

