போதைப்பொருள் கடத்தலை முறியடிக்க விமான நிலையத்தில் மோப்ப நாய் பயன்படுத்தப்படும்!

வி.எம்.சாமி

கே.எல்.ஐ.ஏ விமான நிலையத்தில் பாதுகாப்பு கட்டுப்பாடுகளையும் குறிப்பாக போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக நடவடிக்கைகளை வலுப்படுத்தும் நோக்கில் கே9 எனப்படும் மோப்ப நோய்களின் பயன்பாடு விரிவுபடுத்தப்படும் என்று போதைப் பொருள் குற்ற புலனாய்வுத் துறை இயக்குனர் டத்தோ ஹூசைன் உமார் கான் தெரிவித்தார்.
விமான நிலையத்தில் புறப்பாடு பகுதி மற்றும் வந்திறங்கும் ஆகிய முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் காவல்துறையினர் நிறுத்தப்படுவார்கள் என்றும் தற்போது விமான நிலையத்தில் 69 போதைப்பொருள் குற்றப் புலனாய்வு துறை அதிகாரிகள் பனியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.
மேலும் விரிவான பாதுகாப்புக் கட்டுப்பாடுகளை உறுதி செய்வதற்கும், பாதுகாப்பின் அளவை உயர்த்துவதற்கான மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கும் காவல்துறை, மலேசிய ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் , எல்லைக் கட்டுப்பாடு, பாதுகாப்பு முகமை மற்றும் மலேசிய அரச சுங்கத்துறை ஆகியவற்றுக்கு இடையிலான ஒத்துழைப்பு தீவிரப்படுத்தப்படும் என்று டத்தோ ஹூசைன் உமார் கான் குறிப்பிட்டார்.
எனவே விமான நிலையத்தில் போதைப பொருளை கடத்துவது தொடர்பாக சம்பவங்களை முற்றாக துடைத்தோழிக்கு நடவடிக்கையில் துரித நடவடிக்கைகளை போலீசார் எடுத்து வருவதாக அவர் கூறினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular