
போங்காக் விமான நிலையத்தில் இருந்து சென்னை விமான நிலையம் சென்றடைந்த மலேசிய ஆடவரை சோதனை செய்த சென்னை சுங்கத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ஆடவர் ஹேட்ரோபோனிக் ரகத்திலான உயர் ரகம் கொண்ட போதைப்பொருள் கொண்டு வந்தது தொடர்பாக கைது செய்துள்ளனர்.
கடந்த 7ஆம் தேதி போங்காக் விமான நிலையத்தில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்ட விமானத்தில் பயணம் செய்த மலேசிய ஆடவர் அடவர் விமான நிலையத்தில் பச்சை விளக்கு பகுதியில் இருந்து வெளியேற முயன்ருள்ளார்.
அங்கு பணியில் இருந்த சுங்கத் துறை அமலாக்க அதிகாரிகள் மலேசிய ஆடவர் கொண்டு வந்த பயணம் பெட்டியை எக்ஸ்ரே இயந்திரம் மூலம் சோதனை செய்தபோது அந்த பெட்டியில் 4 பொட்டலங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருளை கண்டறிந்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட மலேசிய ஆடவர் அந்த பயணப் பெட்டியின் கீழ் ஒரு ரகசியமாக இடத்தில் அந்த போதைப்பொருளை மறைத்து வைக்கப்பட்டிருந்ததை சுங்கத் துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மலேசிய ஆடவரை விசாரணை செய்து வருவதாகவும் மேலும் விமான நிலையங்கள் வழி தங்களது பயணத்தை தொடங்குபவர்கள் அறிமுகம் இல்லாத நபர்கள் கொடுக்கும் எந்தப் பொருளையும் வாங்க வேண்டாம் என்று இந்திய புலனாய்வு துறை எச்சரிக்கை விடுத்தது.
மேலும் வெளிநாட்டு பயணச் சலுகை தருவதாக ஆடை வார்த்தை காட்டி இது போன்ற தீய செயலில் ஈடுபடு சட்டப்படி குற்றமாகும் என்று நினைவுருத்தியது.
