நீண்ட கூந்தல் இந்திய பெண்மணி கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றார்!

வி.எ.சாமி

புதுடெல்லி : வட மாநிலமான உத்தர கண்டத்தை சேர்ந்த இந்திய பெண்மணியாண ரேணு தரியல் 271.5 செண்டி மீட்டர் (106-88) அங்குலம் வரை நீளமான கூந்தல் முடியை வளர்த்ததற்கு உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றார்.
இந்தச் சாதனையை 2026 ஆம் ஆண்டு ஹல்த்வானியில் கின்னஸ் புத்தகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதற்கு முன்பு உக்ரேன் நாட்டை சேர்ந்த ஆலியா நசிரோவா எனும் பெண்மணி வைத்திருந்த கூத்தல் 257.33 சென்டி மீட்டர் நிலமாகும். அந்த சாதனையை இந்திய பெண்மணி முறியடித்து வெற்றி பெற்றுள்ளார்.
உலக சாதனையை படைக்க 2015 ஆம் ஆண்டு தொடங்கி தமது தலை முடியை வளர்த்து வருவதாகவும் இதுவரை முடியை வெட்டவில்லை என்று தரியல் கூறினார்.
இந்தியாவின் நீண்ட கூந்தல் அழகு பாரம்பரியம் மற்றும் அடையாளத்தின் சின்னமாக கருதப்படுகிறது. எனவே கூந்தலுக்கு ஆழமான கலாச்சார முக்கியத்துவம் உள்ளது என்பதால் தாம் கடந்த பத்து ஆண்டுகளாக தனது கூத்தலை வளர்க்க தூண்டியது என்றார்.
இவ்வளவு நீளமுள்ள முடியை பராமரிக்க அதிக அர்ப்பணிப்பு தேவைப்படுகிறது. முடியை கழுவி உலர்த்தி சிக்கல் போன்றவற்றை நீக்குவதற்கு பொறுமையும் சகிப்புத்தன்மையும் இருந்தால் மட்டுமே சாதிக்க முடியும் என்றார்.
முடியை பாரமரிக்க விலையுயர்ந்த பொருட்களை சார்ந்திருப்பதை விட ஆரோக்கியமான பழக்க வழக்கங்கள், இயற்கையான முடி பராமரிப்பு முறைகள் இந்த சாதனையை அடைய உதவியதாக தரியல் கூறினார்.
தற்போது உலக கின்னஸ் சாதனையை அடைந்த பிறகு தரியல் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சமூக ஊடகங்களில் பெற்றுள்ளார். அத்துடன் இந்தியாவிலும் வெளி நாடுகளிலும் கூந்தல் பராமரிப்பதற்கான முடி பராமரிப்பு முறைகள் இயற்கை நுட்பங்கள் போன்றவற்றை பகிர்ந்து வருகின்றார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular