முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவின் மனைவி துன் டாக்டர் ஹஸ்மா இன்று காலமானார்!

முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவின் மனைவி துன் டாக்டர் ஹஸ்மா முஹம்மது அலி இன்று தமது 100ஆவது வயதில் காலமானார். தேசிய இருதய கழகத்தில் இன்று காலை சுமார் ஒன்பது இருதிற்கு அவர் உயிர் பிரிந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. தொழிலால் ஒரு மருத்துவரான டாக்டர் ஹஸ்மா தமது வாழ்நாளின் பெரும்பகுதியைப் பொது சுகாதாரத்துக்கு அர்ப்பணித்தார். பிரதமரின் மனைவி என்ற பொதுப் பொறுப்பைப் பயன்படுத்தி, தாய்-சேய் நலன், குடும்பக் கட்டுப்பாடு, எழுத்தறிவு, போதைப்பொருள் தடுப்பு, மனநலம் ஆகிய நோக்கங்களுக்காக அவர் குரல் கொடுத்தார். தாய்-சேய் நலப் பணி உட்பட, அவரது பொது சுகாதாரப் பணி பல பத்தாண்டுகளுக்கு நீண்டிருந்தது. 1926 ஜூலை 12-ஆம் தேதி, சிலாங்கூர் கிளாங்கில் உள்ள கம்போங் ஜாவாவில் பிறந்த டாக்டர் ஹஸ்மா, மலாய் சமூகத்தின் முதல் பெண் மருத்துவர்களில் ஒருவர். 1981 முதல் 2003 வரையிலும், மீண்டும் 2018 முதல் 2020 வரையிலும் பிரதமரின் மனைவியாக இருந்த அவர், மக்களால் “இபு நெகாரா” (நாட்டின் தாய்) என மரியாதையுடன் அழைக்கப்பட்டார். கடந்த ஜூலை மாதம் தமது 100-வது பிறந்தநாளை குடும்பத்தினருடன் எளிமையாகக் கொண்டாடியிருந்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular