40 ஆயிரம் வெள்ளி மதிப்பிலான பற்றுச்சீட்டு; கோலலங்காட் ம .இ.கா வழங்கியது!

வி.எம்.சாமி

பி40 பிரிவை சேர்ந்த 200 இந்தியர் குடும்பங்களுக்கு தலா ஒவ்வொரு குடும்பத்திற்கும் 200 வெள்ளி மதிப்பிலான உணவு பொருட்களை வாங்கும் பற்றுச் சீட்டை கோலலங்காட் தொகுதி ம.இ.கா வழங்கியது.
நவம்பர் மாதம் கொண்டாடப்படும் தீபத் திருநாளை முன்னிட்டு வசதி குறைந்த பந்திங் வட்டாரத்தில் உள்ள 200 இந்திய குடும்பங்களுக்கு இந்த பற்றுச் சீட்டை வாங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக கோலலங்காட் தொகுதி ம.இ.கா தலைவர் வழக்குறைஞர் ரெ.ஸ்ரீதரன் கூறினார்.


இதன் வழி தீபாவளி பெருநாள் கொண்டாட்டத்திற்கு தேவையான பொருட்களை அவர்கள் இப்போது வாங்கி தயார் படுத்தவோ இந்த ஏற்பாட்டை செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும் எல்லா கால கட்டத்திலும் இறுதி நேரத்தில் இது போன்ற உதவிகளை செய்வதால் சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் பல்வேறு சுமைகளை ஏற்க வேண்டி உள்ளதால் அதனை தவிர்க்க இந்த முன் கூட்டியே பற்றுச்சீட்டு வழங்கப்படுவதாக அவர் கூறினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular