
வி.எம்.சாமி
தமிழ்ப்பள்ளி படித்தால் வாழ்க்கையில் உயர் முடியும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாக ஜொகூர் தங்கா கம்போங் சியாலங்கை சேர்ந்த அப்துல் மஜிட் அப்துல் அஜீஸ் சமையல் துறையில் பட்டம் பெற்றார்.
தங்கா சியாலாங் தமிழ்ப்பள்ளியில் 2012 ஆம் ஆண்டு தமது முதலாம் ஆண்டு கல்வியை தொடங்கிய அப்துல் மஜிட் ஆறாம் வகுப்பை முடித்த பின்னர் லேடாங் இடை நிலைப்பள்ளியில் தமது கல்வியை முடித்த பிறகு போட்டிக்சன் பொலிடெக்னிக் பல்கலைக்கழகத்தில் தமது சமையல் கலையை மூன்றாண்டு கற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.
ஒரு சமையல் கலை நிபுராக தேர்ச்சி பெற்ற இவர் கே.எல்.ஐ.ஏ விமான நிலையத்தில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலின் தமது பணியை தொடங்கி தற்போது பணி செய்து வருகின்றார்.
தமது சமையல் கலையை பூர்த்தி செய்ததை முன்னிட்டு போட்டிக்சன் பொலிடெக்னிக் பல்கலைக்கழகம் சிறந்த சமையல் கலை பட்டத்தை சூட்டியது.
ஒரு முஸ்லீம் குடும்பத்தில் மொத்தம் நான்கு பிள்ளைகளான மூத்த அக்கா அமீரா, அப்துல் மஜிட்டின் தம்பி அரீப் ஆகிய மூவரும் ஜாலான் சியாலாங் தமிழ்ப்பள்ளியில் படித்த மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தமது தந்தை காலமான பிறகு தனது கல்வியை தமது தாயார் வான் நோர்ஹிடாயா அவர்களது அரவணைப்பில் தாங்கள் தொடந்து வெற்றி பெற்று வருவதாக அப்துல் மஜிட் அப்துல் அஜீஸ் தெரிவித்தார்.
