
வி.எம்.சாமி
பெங்களூர் : கட்நாடகா ஊரில் யாசகம் எடுத்து வாழ்ந்து வந்த ஒரு மூதாட்டி இறந்ததை தொடர்ந்து அவரது வீட்டை சுத்தம் செய்த போது 30 மூட்டைகளில் 30 லட்சம் ரூபாய் நோட்டு பணத்தை சேமித்து வைத்திருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் மண்டியா மாவட்டத்தில் உள்ள குதாலு பகுதியை சேர்ந்த ஹூர் உன்னிசா எனும் 68 வயது மூதாட்டி அங்குள்ள மசூதியின் வாசலில் முன் நின்று யாசகம் பெற்று வாழ்க்கையை நடத்தி வந்தார்.
இந்நலையில் நேற்று முன் தினம் அவர் உடல் நலக்குறைவால் காலமானார். அவரது வீட்டை மசூதி நிர்வாகத்தினர் முன்னிலையில் கிராமத்தினர் சுத்தம் செய்துள்ளனர். அப்போது 30 க்கும் மேற்பட்ட சாக்கு முட்டையில் கட்டுக்கட்டாக 10, 20, 50, 100, 500 ரூமாய் நோட்டுக்கள் கட்டி வைக்கப்பட்ட நிலையில் மேலும் 3 மூட்டையில் நாணயங்களும் வைக்கப்பட்டிருந்து.
இதனையடுத்து மசூதி நிர்வாகத்தினர் அந்த பணத்தை மசூதிக்கு கொண்டு சென்று பொது மக்கள் முன்னணியில் எண்ணியுள்ளனர். மொத்தம் 30 லச்சத்து 12 ஆயிரம் ரூபாய் என்று தெரியவந்துள்ளது.
அதையடுத்து ஹூர் உன்னியிசாவின் இரு சகோதரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மசூதிக்கு வந்த சகோதரர்களின் ஒருவர் 6 லட்சம் பெற்றுக் கொண்டார். மற்றொருவர் மசூதியின் வளர்ச்சி பணிக்கு 2.5 லச்சத்தை வழங்கினார்.
எஞ்சியுள்ள பணத்தை ஹூர் உன்னிசாவின் ரத்த சொந்தங்கள் உரிமை கோரலாம் என்று மசூதி நிர்வாகம் அறிவித்தது.
