
வி.எம்.சாமி
மலாக்கா: ஆயர்கெரோ,
ஒரு கட்சிக்குள் ஒரு கட்சி உருவாவதையோ அல்லது போட்டி அதிகாரம் உருவாகுவதை அனுமதித்தால் கட்சியில் வலுவாக பீடு நடை போட பல தடங்கள்களை் ஏற்படுத்தும் என்று பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் நூருல் இஸ்ஸா அன்வார் எச்சரித்தார்.
பிகேஆர் கட்சியின் தேசிய மகளிர் மாநாட்டை மலாக்கா ஆயர்கெரோவில் உள்ள மண்டபத்தில் தொடக்கி வைத்து பேசிய அவர் தொடர்சியான உட்கட்சிப் பூசல்களை பிகேஆர் கட்சியால் தாங்கிக் கொள்ள முடியாது என்று கூறினார்.
தற்போது கட்சி உறுப்பினர்களிடையே ஏற்படும் சலசலப்புக்கள் அதற்கான கால நேரத்தை அவர்கள் வாக்காளர்களை சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து அதற்கு தீர்வு காண முயறசித்தால் மீண்டும் நாம் வலிமையான கடைசியாக செயல்பட வழி வகுக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
இரு கேப்டன்கள் ஒரு கப்பலை செலுத்த முடியாது. அதேபோல மறைமுகக் கைகள் அதிகார கட்டமைப்பை உருவாக்க முடியாது. அதேபோல் ஒரு கட்சிக்குள் இன்னொரு கட்சி இருந்து செயல்பட்டால் வலிமையான கட்சியும் வலுவிழந்து தொடந்து பாலமாக இருக்க முடியாது.
தொடந்து பேசிய அவர் பிகேஆர் கட்சியை வலுப்படுத்துவதிலும் மக்களுக்கு சேவை செய்வதிலும் மாநில அல்லது மத்திய அளவிலான அலவிலான உண்மையான தேர்தல்களில் வெற்றிப் பெறுவதை களம் காண ஒருமுகப்படுத்துமாறு பிகேஆர் கட்சியின் துணை தலைவராக நூருல் இஸஸா உறுப்பினர்களை கேட்டுக் கொண்டார்.

தலைமை பீடம் என்பது வெறும் அதிகாரத்தை கொண்டிருப்பதாக மட்டும் பார்க்கக்கூடாது.மாறாக பதவியில் இருப்பவர்களுக்கு ஒப்படைக்கப்பட்ட ஒரு பொருப்பைச் சுமப்பதாக பார்க்க வேண்டும்.
ஒரு கட்சியின் ஆட்சிக்காலம் ஒரு போதும் நிரந்தரமானது அல்ல என்பதை உறுப்பினர்களுக்கு நினைவூட்டிய அவர் இந்த வாய்ப்பு இருக்கும் போதே அதை முழுமையாக பயன்படுத்தக் கொள்ளுமாறு வலியுறுத்தினார்.
அரசாங்க சாவிகள் என்றென்றும் நம்மிடம் நம்மிடம் இருக்கப்போவது இல்லை. எனவே நாம் அதைச் ரசயாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பிகேஆர் கட்சியின் மகளிர் மாநாட்டில் கட்சியின் தேசிய துணைத் தலைவர் நுருல் இஸ்ஸா அன்வார் தெரிவித்தார்.
