லஞ்சம் பெற்றதாக டத்தோ ஸ்ரீ எம்.சரவணன் மீது குற்றச்சாட்டு!

வி.எம்.சாமி

நான்கு ஆண்டுகளுக்கு முன் ஒரு நிறுவனத்திற்கு 1000 வெளிநாட்டு தொழிலாளர் ஒதுக்கீட்டிற்கான விண்ணப்பத்திற்கு ஒப்புதல் அளித்தது தொடர்பாக மொத்தம் 1.097 மில்லியன் வெள்ளியை லஞ்சமா பெற்றதாக முன்னாள் மனிதவளத்துகை அமைச்சரான டத்தோ ஸ்ரீ எம்.சரவணன் மீது இங்குள்ள அமர்வு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

ம.இ.கா கட்சியின் தேசிய துணைத் தலைவரான டத்தோ ஸ்ரீ எம்.சரவணன் மீது அமர்வு நீதிமன்றம் நீதிபதி அசுரா அல்வி முன்னிலையில் மூன்று குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டதாக பெர்னாமா செய்தி குறிப்பிட்டது.
டத்தோ ஸ்ரீ எம்.சரவணன் மனித வளத்துறை அமைச்சராக இருந்த போது 1000 வெளிநாட்டு தொழிலாளர்களை ஒரு நிறுவனத்திற்கு ஒதுக்கீடு செய்ய லஞ்சம் பெற்றதாக நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது.
அவர் மீது மூன்று குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதை அவர் மறுத்ததை தொடர்ந்து அவர் 4 லச்சத்து 50 ஆயிரம் வெள்ளி ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
இவர் மீது மூன்று குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.அனைத்து குற்றச்சாட்டுகளும் மலேசிய ஊழல் தடுபவரப்பட்டதுஆணைச் சட்டம் 2009 (சட்டம் 694) இன் பிரிவு 16 (a) (B) இன் கீழ் கொண்டு வரப்பட்டது.
மேலும் இவ்வழக்கு 29-9-2026 ஆம் தேதி மீண்டும் விசாரணை நடைபெறும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular