சுபாங் நாடாளுமன்றத்தில் இடைத்தேர்தல் இல்லை-தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

வி.எம்.சாமி

சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் வோங் சென் தமது பதவியை ராஜனாமா செய்ததை தொடர்ந்து அங்கு இடைத்தேர்தல் நடைபெறாது என்று தேர்தல் ஆணையம் உறுதி செய்துள்ளது.
பதவிக் காலம் இரண்டு ஆண்டிற்குள் முடிவடைய இருப்பதால் இடைத்தேர்தல நடத்தப்பட அவசியம் இல்லை என்று தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியது.
பி.கே.ஆர் கட்சியை சேர்ந்த சுபாங் நாடாளுமன்ற உறுப்பினராக வோங் சென் கடந்த 14 ஆண்டுகாலம் வகித்த பதவியை அவர் ராஜானாம செய்ததை தொடர்ந்து அங்கு இடைத்தேர்தல் நடைபெரும் எனும் ஆருடத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் தேர்தல் ஆணையம் இத்தேர்தல் நடைபெறது என்று அறிவித்தது.
தற்போது பி.கே.ஆர் கட்சியில் இருந்து விலகிய அவர் பெர்சாமா கட்சியின் இணைந்து அதன் தலைவராக ரஃபிஹி ரம்லி மற்றும் நிக் நஹ்மி நிக் அஹ்மத் ஆகியோருடன் அடுத்த கட்ட நகர்வு குறித்து செய்தியாளர்கள் சந்திப்பை நடத்த உள்ளதாக அவர் தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular