ஈப்போ லுமுட் போலீஸ் நிலையத்தில் போதைப்பொருள் : கான்ஸ்டபல் கைது!

வி.எம்.சாமி

ஈப்போ மஞ்சோங்கிள் உள்ள லுமுட் போலீஸ் நிலையத்தின் சோதனை மேற்கொண்ட போது 18 ஆயிரம் வெள்ளி மதிப்புள்ள போதைப்பொருள் கண்டு பிடிக்கப்பட்டதை தொடர்ந்து 30 வயது தக்க ஒரு கான்ஸ்டபலை கைது செய்துள்ளனர்.
போலீஸ் தலைமையகத்தை சேர்ந்த அதிகாரிகள் காலை 8-30 மணியளவில் இச்சோதனையை நடத்தியதாகவும் அப்போது போலீஸ் நிலையை சிறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருள் போலீசார் கையில் சிக்கியதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட கான்ஸ்டபலுடன் மற்றொரு ஆடவரும் கைது செய்யப்பட்டதாக பேராக் மாநில போலீஸ் படையின் தலைவர் டத்தோ முகமட் அல்வி ஜய்னால் அபிடேன் தெரிவித்தார்.
அதிர்ச்சி ஊட்டும் இச்சம்பவம் தொடர்பாக போலீசார் துரித விசாரணையை மேற்கொண்டு வருவதாக கூரிய அவர் இச்சம்பவத்தின் பின்னணியில் குறித்து ஆராய்ந்து வருவதாக கூறினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular