சவூதி அரேபியாவில் நடைபெறவிருந்த 2034 உலகக் கிண்ண போட்டி 2035ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நடத்தப்படலாம்!

சவூதி அரேபியாவில் நடைபெறவிருந்த 2034 உலகக் கிண்ண போட்டி 2035ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நடத்தப்படலாம் என கூறப்படுகிறது.

சவூதி அரேபியாவில் நடைபெறவுள்ள 2034 உலகக் கிண்ண போட்டி, அனைத்துலக கால்பந்து சங்க வாரியத்திற்கு பெரும் சிக்கல்களை ஏற்படுத்தும் ஆற்றலைக் கொண்டுள்ளது.

2022 கட்டார் பதிப்பைப் போலவே, கோடைக்காலத்தில் மத்திய கிழக்கில் நிலவும் கடுமையான வெப்பம் காரணமாக, இந்தப் போட்டியும் குளிர்காலத்திற்கு மாற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், பொலிடிகோ அறிக்கை ஒன்று, அசாதாரணமான திட்டமிடல் சிக்கல்கள்’ என விவரிக்கப்பட்ட பல முக்கிய திட்டமிடல் முரண்பாடுகளை வெளிப்படுத்தியது.

கட்டாரில் 2022 உலகக் கிண்ண போட்டி நவம்பர் 20 முதல் டிசம்பர் 18 வரை நடைபெற்றது.

ஆனால் அந்தத் தேதி 2034-ஆம் ஆண்டு ரமலான் மாதத்துடன் அது முரண்படும்.

இஸ்லாமிய பிறை நாட்காட்டியின்படி, ரமலான் மாதம் நவம்பர் 12 முதல் டிசம்பர் 12 வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சவூதி அரேபியா உள்ளிட்ட முஸ்லிம் நாடுகளில், ரமலான் மாதம் அன்றாட வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. 

மேலும், உள்ளூர் பழக்கவழக்கங்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் போட்டிகள் இரவில் நடத்தப்பட வேண்டியிருக்கலாம்.

இதனால் 2035ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நடத்தப்படலாம் என கூறப்படுகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular