
(வி.எம்.சாமி)
சரவாக் மாநில அரசாங்கத்திற்கு சொந்தமான ஏர்போர்னியோ விமானம் கூச்சிங் கோலாலம்பூர் ஆகிய இரு நகரங்களுக்கு நேரடி பயணத்தை தற்போது தொடங்கிய வேலையில் அடுத்த கட்டமாக ஆசிய நாடுகளுக்கு அதன் சிறகை விரித்துள்ளதாக சரவாக் மாநில முதலமைச்சர் டத்தோ ஸ்ரீ அபாங் ஜொஹாரி துன் ஓபேங் கூறினார்.
தற்போது கோலாலம்பூருக்கும் கூச்சிங் நகருக்கும் ஏர்போர்னியோ MY5005 ரக விமானம் தமது பயணத்தை தொடங்கியுள்ளது. அத்துடன் சரவாக் தினத்தை முன்னிட்டு ஜீலை 22 ஆம் தேதி அடுத்த கட்டமாக கூச்சிங்கிலிருந்து சிங்கப்பூருக்கும் நேரடி பயணத்தை தொடங்குவதாக அவர் குறிப்பிட்டார்.

ஏர்போர்னியோ விமானத்தின் முதல் பயண வெள்ளோட்ட நிகழ்வை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்த பிறகு சரவாக் முதலமைச்சர் ஊடகத்திற்கு வழங்கிய பேட்டியில் இவ்வாறு கூறினார்.
மேலும் பேசிய அவர் ஏர்போர்னியோ விமானம் அடுத்த கட்ட பயணமாக இந்தோனேசிய ஜாக்கார்த்தா நகருக்கு அதன் பயணத்தை தொடங்க தற்போது ஆயுத்த நிலையில் உள்ளதாகவும் அதற்கான அனுமதியையும் பெற்று விட்டதாக கூரிய அவர் அதன் பயணம் வரும் இரண்டு மாத காலகட்டத்தில் தொடங்கும் என்றும் அதற்கான தரை இருக்கும் அனுமதியை இந்தோனேசியவிடம் பெற்றுள்ளதாக சரவாக் முதலமைச்சர் தெரிவித்தார்.
எனவே இந்த ஆசிய நாடுகளின் விமானப் பயணம் சுற்றுலாத்துறை மூலம் சுற்றுப் பயணிகள் ஈர்க்க முடியும் என்பதுடன் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்காற்ற வழி காணும் என்று அவர் தெரிவித்தார்.
