
(வி.எம்.சாமி)
வெளி நாடுகளுக்கு தங்கள் பிள்ளைகள் கல்வி பயில அனுப்பும் பெற்றோர்களின் தியாகத்தை என்றும் பிள்ளைகள் மறக்ககூடாது பெற்றோர்களின் தியாகமே பிள்ளைகளின் உயர்வுக்கு ஆசீர்வாதமாக அமைகிறது.
அவ்வகையில் இன்று உலகின் ஒரு பிரச்சித்திப்பெற்ற கூகுள் நிறுவனத்தின் தமைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றும் சுந்தர் பிச்சை தாம் சென்னையில் இருந்து அமெரிக்காவிற்கு கல்வி பயில எனது தந்தை ஒரு வருட சம்பளத்தை சேமித்து அனுப்பி வைத்ததோ அதற்கு காரணம் என மனம் திறந்து கூறினார்.
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை உயர் கல்வி பயில வெளி நாடுகளுக்கு அனுப்புவது என்பது தவிர்க்க முடியாத ஒன்று. அப்படி அனுப்பும் பெற்றோர்கள் கல்வி படிப்புக்காக சேமிப்பு, கல்வி கடன், சொத்துக்களை விற்பது போன்ற நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலைக்கு ஆளாகின்றனர்.
எனவே பெற்றோர்களின் கனவை நினைவாக்கும் பொறுப்பு ஒவ்வொரு பிள்ளைகளக்கு இருப்பது உணர்ந்து கல்வியில் மட்டுமே உயர் முடியும் என்று மேற்கல்வியை தொடர் வேண்டும் என்று கூறினார்.
