ஏர்போர்னியோ விமானம் கே.எல்.ஐ.ஏ – சரவாக்நேரடி பயணத்தை தொடங்க உள்ளது!

(வி.எம்.சாமி)
சரவாக் மாநில அரசுக்கு சொந்தமான ஏர்போர்னியோ ஏர்வேஸ் விமானம் கூச்சிங் விமான நிலையத்தில் இருந்து கே.எல்.ஐ.ஏ விமான நிலையத்திற்கு தனது பயண சேவயை தொடங்க உள்ளது.
நாள் ஒன்றுக்கு இரண்டு பயணங்களை நேரடியாக இந்த விமான சேவை வழங்கும் என்று ஏர்போர்னியோ விமான நிருவத்தின் தலைமை செயல்முறை அதிகாரி மெகாட் அர்டியான் வீரா அமினுதீன் கூறினார்.


ஜீன் மாதம் 20ஆம் தேதி அன்று முதல் விமானம் பயணம் கூச்சிங் விமான நிலையத்தில் இருந்து கே.எல்.ஐ.ஏ விமான நிலையத்திற்கு தொடங்கப்பட உள்ளதாகவும் அதற்கான 100 முன் பதிவு இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கே.எல்.ஐ.ஏ விமான நிலையம் நாட்டின் ஒரு மைல் கல்லாக திகழ்வதுடன் சுற்றுலா வர்த்தகம் முதலீடு போன்றவற்றுக்கு நுழைவாயிலாக திகழ்வதால் சரவாக் மாநில மக்களுக்கு இலகுவாக பயணத்தை மேற்கொள்ள உதவும் என்பதுடன் இதன் வழி சுற்றுப் பயணத்திற்கு ஒரு மைல்கல்லாக இந்த விமான பயணம் அமையும் என்றார் அவர்.
இந்த புதிய பயணத்தை முன்னிட்டு அகப்பக்கம் வாயிலாக பயண டிக்கெட் தற்போது முன்பதிவுக்காக திறக்கப்பட்டு விற்பனையாகி வருவதாக அவர் கூறினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular