
தவறுகளை திருத்தி நல்வழி காட்டிட தாய்மையாய் மாணவர்களை அரவணைத்தவர். பணி நிறைவு பெற்று விடைபெற்றாலும் என்றும் மாணவர்களின் ஒளி விளக்காய் திகழ்ந்து வருவார் பாஜாம் துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி துணை தலைமை ஆசிரியர் திருமதி தேன்மொழி முருகன்.
30 ஆண்டுகளாக தமிழப்பள்ளியில் தமது ஆசிரியர் பணியை தொடர்ந்த இவர் படிப்படியாக பல பொறுப்புகளுக்கு பிறகு துணைத் தலைமை ஆசிரியராக பணியாற்றி இன்று பணி ஓய்வு பெற்றார்.
நீலாய் தமிழ்ப்பள்ளியில் தமது ஆரம்ப கால கல்வியை தொடர்ந்த இவர் இடைநிலைப் பள்ளி கல்விக்கு பிறகு தமது ஆசிரியர் பயிற்சியை கோலாலம்பூரில் உள்ள லேம்பா பந்தாய் ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் முடித்துள்ளார்.

நெகிரி செம்பிலான் மாநிலத்தில் மிகவும் பெயர் பெற்ற டத்தோ முருகன் அவர்களின் புதல்வியான துணைத் தலைமை ஆசிரியர் திருமதி தேன்மொழி அவர்களுக்கு இன்று காலை பாஜம் துன் சம்பந்தன் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் சிறப்பான முறையில் பணி ஓய்வு நிறைவு விழாவை நடத்தி சிறப்பு செய்தனர்.
பணியில் இருந்து ஓய்வு பெற்றாலும் பொது வாழ்க்கையில் இருந்து தாம் என்றும் ஓய்வு பெறப் போவது இல்லை என்றும் தமது கணவர் ஆசிரியர் ரவி கணபதி அவர்களது ஒத்துழைப்புடன் கல்வி சம்பந்தப்பட்ட நற்காரியங்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
தர்ஷனி மற்றும் தர்ஷனா எனும் இரு பிள்ளைகள் உள்ளனர்.
