கேரீத்தீவில் மூன்றாவது துறைமுகம் செப்டம்பரில் அடிக்கல் நாட்டு விழா!

(வி.எம்.சாமி)

சிலாங்கூர் மாநிலத்தின் கடற்கரையை ஓட்டிய கேரீத்தீவு தோட்டத்தில் நாட்டின் மூன்றாவது மிகப்பெரிய துறைமுகம் நிர்மாணிக்கப்பட உள்ளது. அத்துறைமுகத்திற்கு போக்குவரத்து துறையின் உரிமம் கிடைத்த பின் அதன் கட்டுமானப்பணி தொடங்கம் என்று மாநில மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
நிலம் தொடர்பாக விசயங்கள் முழுமையாக தீர்க்கப்பட்டு விட்ட நிலையில் தற்போது போக்குவரத்து துறையின் கட்டுமான உரிமம் கிடைத்த பிறகு செப்டம்பர் மாதத்தில் அதன் பணிகள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்தோனேசிய பண்டோங்கில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துக் கொண்ட போது அவர்u செய்தியாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு கூறினார்.
1700 எக்டர் நிலபரப்பில் அமையும் இந்த துறைமுகம் நாட்டின் மூன்றாவது பெரிய துறைமுகமாக உருவாகும் நோக்கில் அதற்கான திட்டங்களை வரையப்பட்டுள்ள து என்றார் அவர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular