
(வி.எம்.சாமி)
25 ஆயிரத்து 500 வெள்ளி மதிப்புள்ள மானிய வெளியிடப்பட்ட 10.2 டன் எடைக்கொண்ட ஒரு கிலோ சமையல் எதுணை பாக்கெட்டுக்களை கடத்தும் முயற்சியை உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கை சுகவீன அமைச்சு முறியடித்துள்ளது.
நேற்று அதிகாலையில் கம்போங் பாவ் செம்பிலான் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் இந்த சமையல் எண்ணை பறிமுதல் செய்யப்பட்டது.
பொது மக்களிடம இருந்து கிடைக்கப்பெற்ற தகவலின் படி பயன்படுத்தாத வீடு ஒன்றில் அமலாக்க பிரிவினர் மூன்று நாட்களாக மேற்கொண்ட கண்காணிப்பு நடவடிக்கையில் பல நபர்கள் ஒரு லேரியில் இருந்து ஒரு கிலோ சமையல் எண்ணையை மற்ற மூன்று வாகனங்களில் இயக்குவதை கண்டதாக செலாத்தான் அமலாக்க துறை இயக்குனர் ஹனிப் யூசப்ரா யூசோப் கூறினார்.
அந்நேரத்தில அமலாக்க அதிகாரிகளை கண்டதும் சம்பந்தப்பட்டவர்கள் அருகிலுள்ள புதர்களுக்குள் தப்பி ஓடியதாகவும் இதில் 49 வயது தக்க லோரி ஓட்டுனர் தடுத்து வைக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இந்த விசாரணையில் மானிய விலை சமையல எண்ணைய் அடங்கிய 600 பெட்டிகள் கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து கிளந்தான் மாநிலத்திற்கு கொண்டு சென்று அண்டை நாட்டிற்கு கடத்தப்பட இருந்ததாக விசாரணயில் தெரியவந்தாக அவர் குறிப்பிட்டார்.
இதுவரை சமையல் எண்ணையை முறைகேடாக பயப்படுத்தும் தொடர்பில் 104 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் மூலம் மொத்தம் 72,886 கிலோ எனண்ணையை பறிமுதல் செய்ததாகவும் அதன் மதிப்பு 1லட்சத்து 78 ஆயிரத்து 836 வெள்ளையாகும் என்று நிருபர்களுக்கு தெரிவித்தார்.
