கோயில் ஹாராம் வார்த்தைக்கு பிரதமர் மன்னிப்பு கோரினார்!

(வி.எம்.சாமி)

சிரம்பான்,
நெகிரி செம்பிலான் மாநிலத்தின் நடைபெறும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இந்திய வாக்காளர்களை சந்தித்த பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்கள் சர்சைக்குறிய நிலங்களில் கட்டப்பட்ட ஆலயங்களை ஹாராம் என்று குறிப்பிட்டதற்க்கு மன்னிப்பு கோரினார்.
சில தவிர்க்க முடியாத காரணத்தால் சாதாரண மனிதன் கூட சில சமயங்களில் வார்த்தை தவறுதலாக பேசுவது வழக்கம். தாம் ஒரு பிரதமராக பணிச்சுமை கால கூட்டத்தின் போது கோயில் ஹாராம் என்ற என்ற வார்த்தையை உச்சரிப்பில் பேசியது தொடர்பாக மன்னிப்பை தெரிவித்துக் கொண்டார்.
மேலும் பேசிய பிரதமர் இந்திய சமூகத்தின் நலன்கள் தொடர்ந்து பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யும் நோக்கில் இனி அனைத்து விவகாரங்களையும் தாமே தனிப்பட்ட முறையில் மேற்பார்வையிடுவேன் என்று அவர் கூறினார்.


சமூகத்தை உள்ளடக்கிய அரசாங்க கொள்கையை ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதே அதன் நோக்கம் என்றும் இதில் மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஆர்.ரமணனின் பங்கை குறைக்கும் நோக்கம் இதில் இல்லை என்று பிரதமர் சுட்டி காட்டினார்.
மித்ரா கீழ் உள்ள இந்திய சமூகம் தொடர்பான அனைத்து பிரச்சினைகளை நான் தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்று கண்காணிப்பேன் என்பதோடு மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஆர்.ரமணன் சமூகம் பாதிக்கும் பிரச்சினைகளை கண்டறிந்து நிவர்த்தி செய்வார் என்று அவர் குறிபிட்டார்.
கடந்த மூன்று ஆண்டுகளாக கட்டத்தில் இந்திய சமுதாய நலனுக்காக மதானி அரசு பல்வேறு கொள்கைகளை அறிமுகப்படுத்தி நிதி கல்வி மற்றும் நலத்திட்டங்களை அமல்படுத்தி வெற்றி அமைந்துள்ளது.
நாட்டின் வரலாற்றில முதன் முறையாக மலாய் சீனர் அல்லாத இந்தியர் என்ற பாகுபாடு இன்றி 10ஏ பெரும் மாணவர்களுக்கும் கிரேட் ஏ பெரும் மாணவர்களுக்கும் மெட்ரிக்குலேஷனில் தானாக இடம் கிடைக்க வழி வகுக்கப்பட்டதாக பிரதமர் பேசினார்.
1000 பேர் கலந்துக் கொண்ட இந்த சந்திப்பு கூட்டத்தில் நெகிரி செம்பிலான் மாநில தேசிய தோட்டத் தொழிலாளர் சங்க செயலாளர் சாந்தகுமார் பச்சையப்பன் உட்பட தோட்ட தொழிலாளர் சங்க பொறுப்பாளர்கள் கலந்து சிறப்பித்தனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular