சரவாக் செரியானில் IPU மிக ஆரோக்கியமற்ற நிலையில் பதிவு !

இன்று காலை 8 மணி வரை சரவாக் மாநிலத்தின் செரியானில் IPU மதிப்பீடு மிக ஆரோக்கியமற்ற நிலையில் பதிவானது.

செரியானில் 218ஆக காற்றின் தரம் மோசமடைந்துள்ளதால் அங்கு இயல்பு வாழ்க்கை பெரும் பாதிக்கப்பட்டுள்ளது.

சரவாக் மாநிலத்தில் 9 இடங்களிலும் மலாக்காவில் ஓர் இடமும் இந்த காற்றின் தரம் மிக ஆரோக்கியமற்ற நிலையில் பதிவு செய்யப்பட்டுள்ளது

இந்த தகவலை மலேசிய காற்று மாசுபாடு மதிப்பீடு நிர்வாக மேலாண்மை APIMS அதன் அகப்பக்கத்தில் தெரிவித்தது

இதனிடையே, நாடு முழுவதும் 50 இடங்களில் காற்றின் தரம் மிதமான அளவில் உள்ளதாகவும் இதர பகுதிகளில் காற்றின் தரம் சீராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular