4 மாநிலங்களில் இன்று காலை 9 மணி வரை இடியுடன் கூடிய கனமழை எச்சரிக்கை!

இன்று காலை 9 மணி வரை நான்கு மாநிலங்களில் இடியுடன் கூடிய மழை, கனமழை, பலத்த காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட் மலேசியா) இதனை கூறியது.

வானிலை எச்சரிக்கையில் சிலாங்கூர் (கிள்ளான், கோல லங்காட், சிப்பாங்), நெகிரி செம்பிலான் (போர்ட்டிக்சன், ரெம்பாவ்) ஆகிய இடங்கள் அடங்கும்.
இந்த எச்சரிக்கையில் மலாக்கா, சரவா ஆகியவையும் அடங்கும்.

குறிப்பாக ஸ்ரீ அமன், பெதோங், கபிட் (சோங், புக்கிட் மாபோங்), பிந்துலு (டாடாவ்) ஆகிய இடங்களில் கனமழை பெய்யும்.

மணிக்கு 20 மி.மீ-க்கு மேல் மழைப்பொழிவுத் தீவிரத்துடன், உடனடியாக ஏற்படவிருக்கும் அல்லது ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும்  இடியுடன் கூடிய மழையின் அறிகுறிகள் தென்படும்போது எச்சரிக்கை விடுக்கப்படுவதாக மெட் மலேசியா தெரிவித்தது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular