
அம்னோ பாஸ் ஒன்றுக்கொன்று மோதிக் கொள்ளாமல் ஒத்துழைப்புடன் செயல்பட்டால் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள மொத்தம் 56 சட்டமன்ற தொகுதிகளில் 34 சட்டமன்ற தொகுதிகளை இந்த கூட்டணி வெல்லும் என்று சிலாங்கூர் மாநில முன்னாள் அம்னோ தலைவர் டான்ஸ்ரீ நோர் ஓமார் கூறினார்.
அம்னோ கட்சியும் பாஸ் கட்சியும் மோதிக் கொள்ளக்கூடாது என்ற திட்டம் நீண்ட காலமாக இருந்து வந்தது. இந்த யுக்திகளை ஒன்றிணைந்தால் சிலாங்கூர் மாநில சட்ட மன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பு உறுதி செய்யப்படும் என்றார் அவர்.
முன்பதாக ஷா ஆலமில் நடைபெற்ற இளஞர் பிரதிநிதிகள் கூட்டத்திற்கு பிறகு முன்னாள் சிலாங்கூர் மாநில அம்னோ தலைவரும் அமைச்சருமான டான்ஸ்ரீ நோர் ஓமார் ஊடகத்தாரிடம் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர் பொதுத் தேர்தல் கால கட்டத்தில் மும்முனை போட்டியின் காரணத்தால் வாக்குகள் பிரிவதால் எதிர்கட்சிகளுக்கு மட்டுமே சாதகமான அமைகிறது. எனவே அம்னோ பாரிசான் நேசனல் கட்சியும் பாஸ் கட்சியும் ஒன்றிணைந்து போட்டியிட்டால் சிலாங்கூர் மாநிலத்தில் மொத்தம் 56 சட்ட மன்ற தொகுதிகளில் 34 சட்ட மன்றத்தை வெற்றிக்கொள்ள முடியும் என்று அவர் தெரிவித்தார்.
