மஇகாவின் 80ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள்; தேர்தலால் ஜொகூர் மாநிலத்தில் விமரிசையாக நடைபெறும்!

மஇகாவின் 80ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள் நாடு முழுவதும் நடத்தப்படவுள்ளன.

ஜொகூர் தேர்தலை முன்னிட்டு அம்மாநிலத்தில் போட்டிகள் இன்னும் விமரிசையாக நடத்தப்படும் என்று மஇகா உதவித் தலைவரும் 80ஆம் ஆண்டு நிறைவு விழா ஒருங்கிணைப்பாளருமான டத்தோ முருகையா கூறினார்.

மஇகா தனது 80ஆம் ஆண்டு நிறைவு விழாவை மிகவும் கோலாகலமாக கொண்டாடி வருகிறது.

கோலாலம்பூர் ஸ்ரீ  மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு பூஜையுடன் இவ்விழா தொடங்கியது.

அதனைத் தொடர்ந்து மஇகாவின் குடும்ப தின விழா நாடு முழுவதும் நடத்தப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக மஇகாவின் ஏற்பாட்டில் விளையாட்டு போட்டிகள் தற்போது நாடு முழுவதும் நடைபெறவுள்ளன.

வரும் ஜூன் 20ஆம் தேதி ஜொகூர் மாநிலத்தை தவிர்த்து நாடு முழுவதும் மஇகாவின் விளையாட்டு போட்டிகள் நடைபெறும்.

அதே வேளையின் ஜொகூர் மாநிலத்தில் வரும் ஜூன் 21ஆம் தேதி இந்த விளையாட்டு போட்டிகள் நடைபெறும்.

ஜொகூர் மாநிலத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது.

இத்தேர்தலில் நான்கு சட்டமன்றத் தொகுதிகளில் மஇகா போட்டியிடும் என கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

இதனால் அம்மாநிலத்தில் மஇகாவின் இந்த விளையாட்டு போட்டிகள் இன்னும் சிறப்பாக நடைபெறும்.

இதன் உச்சக்கட்ட விழா ஜொகூர் சிகாமட்டில் நடைபெறும். அதே வேளையில் அம்மாநிலத்தின் பல தொகுதிகளில் இப்போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

இதே போன்று நெகிரி செம்பிலானில் நடைபெறும் போட்டிகளிலும் தனி கவனம் செலுத்தல்படும்.

கால்பந்து, பூப்பந்து, கேரம், ஹாக்கி என பல போட்டிகள் இதில் இடம் பெறவுள்ளன.

ஆகவே சுற்றுவட்டார மக்கள் திரளாக வந்து இப்போட்டிகளில் கலந்து கொள்ளுமாறு டத்தோ முருகையா கேட்டுக் கொண்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular