
இந்தோனேசியாவில் இன்று காலை 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து வலுவான நில அதிர்வுகளும் ஏற்பட்டன.
செவ்வாய்க்கிழமை காலை பாலி, மத்திய சுலவேசியின் சில பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.
நில அதிர்வுடன் தொடர்ந்த நிலநடுக்கம் ஒரு நிமிடத்திற்கும் மேலாக வலுவாக நீடித்தது. இதனால் ஏற்பட்ட சேதம் அல்லது உயிரிழப்புகள் குறித்த எந்தத் தகவலும் உடனடியாகக் கிடைக்கவில்லை.
