
டெல்லியின் அனைத்துப் பகுதிகளுக்கும் இந்திய வானிலை ஆய்வு மையம் ‘ரெட் அலர்ட்’ விடுத்திருந்த நிலையில், அங்கு கடுமையான புழுதிப்புயல் வீசியது.
தலைநகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், மணிக்கு 60-80 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. பாலம் மற்றும் துவாரகா பகுதிகளில் நேற்று பிற்பகல் 2:30 மணி நிலவரப்படி, மணிக்கு 92 கி.மீ. வேகம் வரை காற்று வீசியது.
நேற்று காலையிலும் டெல்லியில் லேசான மழை பெய்தது. இமயமலைப் பகுதியில் ஏற்பட்டுள்ள திடீர் மேற்கத்திய இடையூறு காரணமாக இந்த மழைப் பொழிவு ஏற்பட்டுள்ளது.
