
சிலாங்கூர் காஜாங்கிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின், 7ஆவது மாடியிலிருந்து விழுந்த 11 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.
காலை சுமார் 6.50 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது என்றும் உதவி கோரும் சிறுவனின் குரலைக் கேட்ட குடியிருப்புவாசிகள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுவன் பள்ளிக்குச் செல்லத் தயாரான நிலையில், பள்ளிப்பையை சுமந்தபடியும் தண்ணீர் பாட்டிலை கையில் வைத்தபடியும் இருந்ததாக கூறப்படுகிறது.
தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, ஆம்புலன்ஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். எனினும், சிறுவன் பின்னர் உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்தச் சம்பவத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
