
எண்ணை விலை அதிகரிப்பை தொடர்ந்து ஏப்ரல் மாதம் தொடக்கம் தமது விமான பயண சேவையை மூன்றில் ஒரு பகுதியாக 35 சரவீத பயணத்தை மீட்டுக் கொண்ட நாட்டின் தனியார் விமான நிறுவனமான பாத்தேக் ஏர் விமானம் அதன் பயணத்தை மீண்டும் வழக்க நிலைக்கு திரும்பும் பொருட்டு கே.எல்.ஐ.ஏ விமான நிலையத்தில் இருந்து சீனா ஷாங்காய் நகருக்கு தமது நேரடி விமான பயணத்தை தொடங்கியதாக பயண வெள்ளோட்ட நிகழ்வு குறித்து பாத்தேக் ஏர் நிருவன் தலைமை அதிகாரி டத்தோ சந்திரன் ராமமூர்த்தி கூறினார்.
2026ஆம் ஆண்டு மலேசியாவிற்கு வருகை தரும் ஆண்டாக அறிவிப்புக்கு முன் பாத்தேக் ஏர் விமானம் கே.எல்.ஐ.ஏ – ஆஸ்திரேலியா சிட்னிக்கும் மற்றும் ஷாங்காய்க்கும் ஏப்ரல் மாதம் பயணத்தை தொடங்கம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது கால மாற்றத்தால் இந்த பயணம் தொடங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
43 மில்லியன் வெளிநாட்டு சுற்றுப்பயணிகளை ஏர்க்க இலக்காக இந்த 2026ஆம் ஆண்டில் சுற்றுலா ஆண்டை இலக்காக கொண்டுள்ளது. அதற்கு உயிருட்டும் வகையில் சீனாவில் மிகவும் ஆற்றல் மிக்க பகுதியான ஷாங்காய் நகருக்கு பாத்தேக் ஏர் விமானம் தமது நேரடி சேவையை விளங்குவது பெருமைக்குரியது என்றார் டத்தோ சந்திரன் ராமமூர்த்தி.
தற்போது பாத்தேக் ஏர் விமான நிருவனம் 21 நாடுகளுக்கு 60க்கும் மேற்பட்ட தமது பயணத்தை தொடங்குவதாகவும் இதில் வாரத்திற்கு 1400 க்கும் மேற்பட்ட விமான பயணங்களை 7 ஏர்பஸ் A330-300 ரக விமானங்களும், 47 போயிங் 737-8 மற்றும் 737-800 ரக விமானங்களை தமது சேவையில் ஈடுபட்டு வருவதாக பாத்தேக் ஏர் விமான நிறுவனத்தின் தலைமை அதிகாரி டத்தோ சந்திரன் ராமமூர்த்தி குறிப்பிட்டார்.
