
பெட்ரோல் நிலையத்தில் கருப்பு எண்ணையை திருடிய சம்பவம் தொடர்பில் 31 வயது தக்க இரண்டு ஆடவர்களை போலீசார கைது செய்ததுடன் மற்றொரு ஆடவரை போலீசார் தேடி வருவதாக கோலலங்காட் மாவட்ட ஓசிபிடி சூப்பிரொண்டன் Mohd AkmalRizal Radzi தெரிவித்தார்.
இச்சம்பவம் பந்திங் ஜாலான் மோரீப் சாலையில் உள்ள கஞ்சோங் டாராட் எண்ணை நிலையத்தில் நேற்று மதியம் 4-00 மணியளவில் நடைபெற்றதாக ஓசிபிடி குறிப்பிட்டார்.
சம்பவம் நிகழ்ந்த போது பிரதான பெட்ரொல் எணணை நிலையத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் மோட்டார் சைக்கிள்களுக்கு பயன்படுத்தும் 3 கருப்பு எண்ணை பாட்டில்ளை சாதுரியமாக எடுத்து பணம் செலுத்தாமல் சென்ற ஆடவர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த MYVY ரகக்காரில் தப்பித்து சென்றுள்ளார்.
இதன் தொடர்பாக புகார் கிடைக்கப் பெற்றதை தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையின் பேரில் 2 உள்நாட்டை சேர்ந்த ஆடவர்களை கைது செய்ததுடன் மற்றொரு ஆடவரை தேடி வருவதாக மாவட்ட ஓசிபிடி குறிப்பிட்டார்.
செஷ்சன் 380 பிரிவு திருட்டு குற்றப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுருபதுடன் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டு சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும்.
இச்சம்பவம் குறித்து பொது மக்கள் வீடியோ அல்லது தப்பான தகவல்களை பகிர்வதை தவிர்க்கும் படி கோலலங்காட் மாவட்ட ஓசிபிடி சூப்பிரொண்டன் Mohd AkmalRIzal Radzi தெரிவித்தார்.
