
(வி.எம்.சாமி)
செலயாங் சந்தையில் கோலாலம்பூர் மாநகராட்சி அதிகாரிகள் நடத்திய சோதனையில் உரிமம் இல்லாமல் வணிகம் செய்த 11 காடுகளில் இருந்து அன்னிய நாட்டவர்களின் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
உரிமம் இல்லாமல் அன்னிய நாட்டினர் கடைகளை நடத்தியதுடன் மற்றும் பொது நடைபாதையை அடைத்து அந்த பகுதியில் வியாபாரம் செய்து வந்தது தொடர்பாக சம்பந்தப்பட்ட பகுதிகளை அடையாளம் கண்டு கோலாலம்பூர் மாநகராட்சி அமலாக்க அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தியுள்ளனர்.
சம்பந்தப்பட்ட கடைகளில் காய்கறி,
பழங்கள் மற்றும் அன்றாட வாழ்க்கை பயன்பாட்டிற்காக பொருட்களை அமலாக்க அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
பறிமுதல் செய்யப்பட்ட அனைத்துப் பொருட்களும் அனைத்தும் டிபிகேஎல் சேமிப்பு கிடங்கிற்கு எடுத்துச் செல்லப்பட்டுதாகவும் இந்த சோதனை கோலாலம்பூர் மாநகராட்சி அமலாக்க அதிகாரிகள், செலயாங் நகர மன்றம் மற்றும் காவல்துறையின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்டது.
