
(வி.எம்.சாமி)
மலேசிய கடல்சார் அமலாக்க பிரிவினர் மேற்கொண்ட நடவடிக்கையில் இரண்டு இந்தோனேசிய இழுவைக் படகு ஊழியர்களையும் 10 ஆயிரம் லிட்டர் மானிய விலை டீசல் எண்ணெயுடன் 10 ஆயிரம் வெள்ளி ரொக்கத்துடன் கைது செய்தனர்.
ஒப்ஸ் ஏசான், ஓப்ஸ் திரிஷ் ஓப்ஸ் கஷ் தஞ்சோங் சிரி 2 எனும் பிரிவின் கீழ் வழக்கமான கடல் ரோந்துப் பணியில் ஈடுப்பட்டிருந்த அமலாக்க பிரிவினர் கோலலங்காட் பகுதியில் உள்ள சுங்கை லங்காட் பகுதியின் 0.1 கடல் மைல் தொலைவில் சம்பந்தப்பட்ட படகு கவிழ்ந்ததாக தகவல் கிடைத்ததாக சிலாங்கூர் மலேசிய கடல் சார் இயக்குனர் கேப்டன் அப்துல் முஹைமின் முஹமட் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட படகை சோதனை செய்த போது அந்த படகில் இந்தோனேசிய நாட்டை சேர்ந்த 44 வயதுடைய படகை செலுத்திய ஆடவரும் 23 வயது பணியாளரும் நாட்டிற்குள் நுழைவதற்காக எந்த வித தஸ்தாவேஜிக்களை வைத்திருக்கவில்லை என்றார் அவர்.
படகில் கண்டெடுக்கப்பட்ட டீசன் எண்ணெயை எடுத்து செல்வதற்கு எந்தவிதமான ஆவணங்களை சமர்ப்பிக்கவில்லை என்பதுடன் பணம் தொடர்பாக விபரங்களை காட்ட தவறியதால் சம்பந்தப்பட்ட இருவரும் புலாவ் இந்தா கடல் சார் காவல் படைத் துறைக்கு கொண்டு சென்றதாக அவர் தெரிவித்தார்.
