
(வி.எம்.சாமி)
நாடு முழுவதும் அன்னிய நாட்டவர்கள் கூடும் பகுதியாக 200 இடங்களை அடையாளம் கண்டுள்ளதாக குடிநுழைவுத்துறை தலைமை இயக்குனர் டத்தோ ஜாக்காரியா ஷாபான் தெரிவித்தார்.
அதில் 100 இடங்கள் கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதிகளை ஒட்டிய இடங்கள் என்பதை உளவுத்துறை ஆய்வில் கண்டறியப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
சம்பந்தப்பட்ட பகுதிகள் எங்கு உள்ளது என்பது தெரிவிக்க மறுத்த அவர் அவ்வப்போது அமலாக்க பிரிவினர் மேற்கொள்ளும் திடீர் சோதனைகளுக்கு இடையூறாக அமையும் என்பதால் குடிநுழைத்துறை தலைமை இயக்குனர் தெரிவிக்க மறுத்தார்.
ஜாலான் கெனங்காவில் நடைபெற்ற ஒப்ஸ் மெகா நடவடிக்கைக்கு பிறகு அவர் ஊடகத்திற்கு வழங்கிய செய்தியில் தெரிவித்தார். குறிப்பாக கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் மட்டுமே அன்னிய நாட்டவர்கள் ஒன்றுகூடும் இடங்களாக 100 இடங்கள் அடையாளம் காணப்பட்டாலும் அமலாக்க துறையினர் முறையான தஸ்தாவேஜிக்கள் இல்லாமல் நாட்டில் கள்ளத்தனமாக குடியிருப்பவர்களை சோதனை மூலம் கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்கும் என்று அவர் தெரிவித்தார்.
