மோரீப் கடற்கரையில் ஆடிப்பெருக்குபுதுமண தம்பதியினருக்கு முகப்பிடம்!

(வி.எம்.சாமி)
இந்தியர்களின் பாரம்பரிய விழாக்களில் ஒன்றன ஆடி மாதம் கொண்டாடப்படும் ஆடிப்பெருக்கு கடல் நீர் விழாவில் புதுமணத் தம்பதியினர் தங்கள் திருமணத்தின் போது பயன்படுத்திய மாலையை கடலில் விடும் சடங்குகள் மிக விமரிசையாக மோரீப் கடற்கரையில் நடைபெறும்.
ஆண்டுதோறும் நடைபெறும் இந்த சடங்கின்போது கடற்கரை பகுதிக்கு வரும் புதுமணத் தம்பதியினரின் குடும்பத்தார் சாங்கிய சம்பிரதாயங்களை செய்ய முதன் முறையாக மோரீப் கடற்கரை பகுதியில் கூடாரங்கள் அமைத்து கொடுக்கப்படும் என்று கோலலங்காட் நகராண்மைக் கழக உறுப்பினர் பன்னீர்செல்வம் குப்பன் தெரிவித்தார்.
எனவே இந்த கூடாரங்கள் புதுமணத் தம்பதியினர் கடலில் மாலை விடும் சடங்குகளை நடத்த மட்டுமே பயன்படுத்த வேண்டுமே தவிர பொது மக்கள் பயன்பாட்டிற்கு தவறாக பயன்படுத்த வேண்டாம் என்று அவர் ஆலோசனை வழங்கினார்.
குறிப்பாக மோரீப் கடற்கரை பகுதிக்கு வரும் பொது மக்களுக்கு உதவும் நோக்கில் கோலலங்காட் நகராண்மைக் கழகம் இந்த ஏற்ப்படுத்தியதாக அவர் கூறினார். மேலும் ஆகஸ்ட் மாதம் 3ஆம் தேதி ஆடிப்பெருக்கை முன்னிட்டு 2ஆம் தேதி இரவு 8-00 மணிக்கு கலை நிகழ்ச்சி நடைபெறும் என்பதோடு மறுநாள் 3 ஆம் தேதியும் மாலை 6 மணிக்குக்கும் கலை நிகழ்ச்சி நடைபெறும் என்றார் பன்னீர்செல்வம் குப்பன்.
இந்த கலை நிகழ்ச்சியில் புதுமணத் தம்பதியருக்கு பரிசு வழங்கப்படும் என்பதால் திரளாக மக்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கும் படி அவர் கேட்டுக் கொண்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular