ஏர் இந்தியா விமானம் நடு வானில் குலுங்கியது;20 பயணிகள் படுகாயம்!

வி.எம்.சாமி

தாய்லாந்து புக்கிட் தீவில் இருந்து டெல்லி நகரை நோக்கி 200 பயணிகளை சுமந்து புறப்பட்ட ஏர் இந்தியா ஏ320 நீயோ ஏஐ2379 ரக போயிங் விமானம் நடு வானில் ஏற்பட்ட காற்றழுத்தால் அதில் பயணம் செய்த 20 பயணிகள் படுகாயம் அடைந்துள்ளனர்.
ஏர் இந்தியா விமானம் நடுவானில் பறந்துக் கொண்டிருந்த போது வானில் ஏற்பட்ட வளி மண்டல காற்றழுத்தத்தால் 300 அடி கீழே விழுந்து விமானம் குலுங்கியுள்ளது. இதனால் இருக்கையில் இருந்த பயணிகள் முன்னால் உள்ள இருக்கையில் மோதிக்கொண்டதுடன் பலர் கத்தி கூட்டலிட்டுள்னர்.
அப்போது விமானத்தில் இருந்த 20 பயணிகள் காயமடைந்ததை தொடந்து விமானம் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தை பாத்திரமாக தரையிறங்கிய பிறகு காயமடைந்த 20 பேரும் மருத்துவ மனைக்கு கொண்டு சொல்லப்பட்டுள்ளர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular