
வி.எம்.சாமி
சிங்கப்பூர் ஊட்லண்ட்ஸ் சோதனை சாவடியில் 361,000 சிங்கப்பூர் டாலர் மதிப்புள்ள போதைப் பொருளை காரின் டிக்கியில் கடத்தி சென்ற இளஞரை சிங்கப்பூர் சுங்க சாவடி போலீசார் கைது செய்துள்ளனர்.
இம்மாதம் 1 ஆம் தேதி 1.5 கிலோ எடையுள்ள ‘ஐஸ்’ ரகத்திலான போதைப் பொருளை தாம் செலுத்திய காரின் டிக்கியில் மறைத்து வைத்து சென்றதை சோதனை வழி கண்டறிந்த சிங்கப்பூர் போலீசார் காரை தடுத்து நிறுத்தி பறிமுதல் செய்ததோடு மலேசிய இளஞரான 22 வயது ஆடவரையும் கைது செய்துள்ளனர்.
கைப்பற்றி போதைப் பொருள் 3,61,000 சிங்கப்பூர் டாலருக்கு அதிகமாக மதிப்பாகும். ஒரு பொட்டியில் இரண்டு கட்டிகள் அடங்கிய போதைப் பொருளை மறைத்து கொண்டு வந்ததை மிகவும் துரிதமாக சோதனை நடத்திய சிங்கப்பூர் போலீசார் கடத்தலை முறியடித்துள்ளனர்.
