11.5 மில்லியன் வெள்ளி மதிப்பிலான மதுபான கடத்தல்! சுங்கத்துறை பறிமுதல்!

வி.எம்.சாமி

சிலாங்கூர் போர்ட் கிள்ளான் துறைமுகத்தின் வர்த்தக கிடங்கல் சுங்கத்துறை அமலாக்க அதிகாரிகள் நடத்திய சோதனையில் வரி செலுத்தப்படாத மதுபானங்களை பறிமுதல் செய்ததாக நெகிரி செம்பிலான் மாநில சுங்கத்துறை இயக்குனர் ஜமால் பைமன் தெரிவித்தார்.
அதன் மதிப்பு 11.5 மில்லியன் வெள்ளி என்றும் அதில் பல்வேறு வகையிலான என்பதோடு 16,096 பாட்டில்கள், 568,470 டன்களில் அமைக்கப்பட்ட மதுபானங்கள் என்று சுங்கத்துறை இயக்குனர் கூறினார்.
ஜீலை 1 ஆம் தேதி இரவு 9-30 நடத்தப்பட்ட இந்த சோதனையில் சுங்க (இறக்குமதி தடை) ஆணை 2023 பிரிவின் கீழ் உரிய வரிகள் செலுத்தப்படவில்லை என்ற முறையில் 1967 ஆம் ஆண்டு சுங்கத் துறை சட்டம் 114 வது பிரிவின் கீழ் அமலாக்க அதிகாரிகள் இப்பொருட்களை பறிமுதல் செய்ததாக அவர் குறிப்பிட்டார்.
இச்சோதனையின் போது 27 வயது தக்க ஒரு ஆடவரை கைது செய்ததுடன் இந்த சம்பவம் தொடர்பாக சுங்கத்துறை விரிவான விசாரணையை நடத்தி வருவதாகவும் குற்றம் உறுதி செய்யப்பட்டால் இதில் பொருட்களின் மதிப்பில் 20 மடங்கு வரை அபராதம், சிறைதண்டனை அல்லது இரண்டுமே கிடைக்க வகை செய்யும் என்று சுங்கத்துறை இயக்குனர் ஜமால் பைனம் சொன்னார்.
இதனிடையே சிப்பாங் பகுதியில் ஒரு லோரியை நிறுத்தி சோதனை செய்த சுங்கத்துறை அமலாக்க அதிகாரிகள் வரி செலுத்தப்படாத 426 மின்னனுக்கள் அடங்கிய பெட்டியை கைப்பற்றியுள்ளனர்.
அந்த பொருட்களின் மதிப்பு 6,40,000 வெள்ளியாகும். இதற்கு செலுத்தப்படாத வரி 70 ஆயிரம் ஆகும். இச்சம்பவம் தொடர்பாக 34 வயது ஒரு நபரை கைது செய்ததாக குறிப்பிட்ட அவர் மேல் விசாரணை தொடர்ந்து வருவதாக தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular