போதைப்பொருள் கடத்தல் சம்பவம் தொடர்பாக புக்கிட் அமான் சிறப்பு பிரிவு ஜக்கார்த்தா பயணம்!

வி.எம்.சாமி
மலேசிய விமானி ஒருவர் சம்பந்தப்பட்ட போதைப் பொருள் கடத்தல் சம்பவம் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக புக்கிட் அமான் போலீசார் புலனாய்வு மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் கொண்ட ஒரு சிறப்பு பிரிவு குழுவை 11 ஆம் தேதி ஜாக்கார்த்தாவிற்கு அனுப்பவுள்ளது.
போதைப் பொருள் கடத்தல் சம்பந்தப்பட்ட செயல்பாட்டுன் பின்னணியில் இருப்பதாக நம்மப்படும் கும்பலைப் பற்றிய கூடுதல் தகவல்களை சேகரிப்பதுடன் இதன் தொடர்பில் இந்தோனேசிய அதிகாரிகளுடன் தங்கள் அதிகாரிகள் இணைந்து நடவடிக்கைகளை எடுக்க பெரிதும் துணை புரியும் என்று தேசிய போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குனர் டத்தோ ஹூசேன் ஒமார் கான் கூறினார்.
கே.எ.ஐ.ஏ விமான நிலையத்தில் இருந்து விமானி ஒருவர் ஜக்கார்த்தா விமான நிலையத்திற்கு கடத்தி சென்ற சம்பவம் தொடர்பாக தற்போது சம்பந்தப்பட்ட போதைப் பொருள் வினியோகம் எங்கிருந்து வந்தது, எந்தக் கும்பல் இதில் ஈடுபட்டுள்ளது என்பது குறித்து விசாரணை நடத்தப்படும்.
அத்துடன் கே.எல்.ஐ.ஏ விமான நிலையத்தில் சம்பந்தப்பட்ட விமானி பாதுகாப்பு சோதனையை எவ்வாறு கடந்து சென்றார் என்பதுடன் இந்தோனேசியாவில் உள்ள கும்பலுடன் அவருக்கு என்னென்ன தொடர்புகள் உள்ளன என்பது உள்ளிட்டு ஒட்டுமொத்த போதைப் பொருள் விநியோக வலையமைப்பையும் போலீசார் முழுமையாக ஆராயும் என்று டத்தோ ஹூசைன் ஓமார் கான் தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular