
வி.எம்.சாமி
குவாந்தான் சுங்கை லெம்பிங்கில் உள்ள ஒரு கைவிடப்பட்ட ஹோட்டலில் இருந்து மோசடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த சீனா மற்றும் ரஷ்யா நாட்டை சேர்ந்த 98 பேர் கைது செய்யப்பட்டதாக குடி நுழைவுத்துறை தலைமை இயக்குனர் டத்தோ ஜகாரியா ஷாபான் தெரிவித்தார்.
ஒரு மாத காலகட்டத்தில் கண்காணிப்பு பணியை மேற்கொண்ட பிறகு சம்பந்தப்பட்ட கைவிடப்பட்ட ஹோட்டலில் இருந்து அழைப்பின் வழி மோசடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது உறுதி செய்யப்பட்ட பிறகு கடந்த 5ஆம் தேதி குடி நுழைவுத்துறையினர் அதிரடி சோதனை நடத்தியதாக அவர் புத்ரா ஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தின் போது கூறினார்.
சம்பந்தப்பட்ட இந்த மோசடி கும்பல் சுமார் மூன்று மாத காலகட்டமாக செயல்பட்டு வருவதாகவும் மேலும் இந்தக் கும்பல் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்குள் சென்று வந்ததாகவும் அவர்கள் தங்கியிருந்து ஹோட்டலில் நியமிக்கப்பட்ட ஒரு சமையல்காரன் வேண்டிய உணவுகளை தயாரித்து வந்துள்ளதாக அவர் சொன்னார்.
ஜெனரேட்டர்களில் இருந்து மின்சாரத்தை பயன்படுத்தி இணையத்தை இயக்குவதற்காக சாதனங்களை பயன்படுத்தி வந்துள்ளனர். இந்த மோசடி கும்பல் செயல்பாடுகள் முழுமையாக நிலைத்தன்மை வாய்ந்தது என்றும் அதிரடி சோதனையின் போது கைவிடப்பட்ட ஹோட்டலின் உரிமையாளர் என நம்பப்படும் ஒரு உள்ளூர்வாசியும் மேலும் அங்கு பணிப்புரிந்து வந்ததாக நம்பப்படும் இரண்டு உள்ளூர்வாசிகள் கைது செய்யப்பட்டதாக டத்தோ ஜகாரியா ஷாபான் கூறினார்.
20 முதல் 75 வயதுக்கு உட்பட்ட 98 பேரை கைது செய்ததாகவும் குறிப்பாக சம்பந்தப்பட்ட கும்பல் தங்களுடைய சொந்த நாட்டை சேர்ந்தவர்கள் குறிவைத்து மோசடி திட்டத்தில் ஈடுபட்டு வந்ததாகவும் இதில் ஈடுபட்டுள்ள ஒவ்வொருவருக்கும் மாதம் தலா 3 ஆயிரம் வெள்ளி சம்பளத்தை பெற்று வந்துள்ளதாவும், சோதனையின் போது 49 சீனா நாட்டவர்கள் அனைத்துலக கடப்பிதழ் ஒரு கம்போடிய கடப்பிதழ் பறிமுதல் செய்யப்பட்டதாக டத்தோ ஜகாரியா ஷாபான் தெரிவித்தார்.
