
(வி.எம்.சாமி)
டிசம்பர் மாத நடுப்பகுதியில் செயல்பட உள்ள கிழக்கு கரை ரயில் திட்டமான இ.சி.ஆர்.எல் ரயில் பயணத்திற்கான கட்டணமாக ஒரு வழி பயணக் கட்டணமாக 125 வெள்ளியாகவும், அதேப்போல நின்று செல்லும் இடத்திற்கும் 125 வெள்ளையாகவும் விரைவு பயணத்திற்கு 147 வெள்ளையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும் பயணிகள் முன்பதிவு செய்யும் நேரத்தை பொறுத்து ரயில் பயணத்திற்கான கட்டணத்தை கூடுதலாக செலுத்த வேண்டி இருக்கும் என்று மலேசிய ரயில் இணைப்பு தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ ஸ்ரீ டார்விஸ் அப்துல் ரசாக் கூறினார்.
மேலும் ஊடகத்திற்கு வழங்கிய பேட்டியில் கோத்தாபாருவிலிருந்து கோம்பாக்கிற்கு அல்லது கோம்பாக்கில் இருந்து கோத்தாபாருவுக்கு செல்லும் மாற்று வழி ரயிலுக்கான கட்டணம் 156 ஆகும் என்பதுடன் முன் பதிவு கட்டண விலை மாறும் என்றார் அவர்.
அத்துடன் கோம்பாக் மற்றும் கோல திரங்கானுவுக்கும் இடையிலான மாற்று வழி ரயில் கட்டணம் 95 வெள்ளியில் இருந்து விரைவு பயணத்திற்கான கட்டணம் 110 வெள்ளியில் இருந்து தொடங்கும் என்றும் இதில் எதிர் திசை பயணிகளுக்கும் அதே கட்டணம் பொருந்தும் என்றார்.
வழக்கமான ரயில் பயணம் ஒவ்வொரு நிலையத்திலும் நின்று செல்லும் என்பதோடு விரைவு ரயில் கோம்பாக், கோத்தா எஸ்ஏஏஸ், கோலதிரங்கானு ஆகிய முக்கிய நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும் என்று டத்தோ ஸ்ரீ டார்விஸ் அப்துல் ரசாக் குறிப்பிட்டார்.
கோம்பாக் பகுதியில் இருந்து கோத்தாபாரு ரயில் நிலையத்திற்கு செல்ல விரைவாக ரயில் பயணம் சுமார் 4 மணி நேரம் ஆகும் என் எதிர்பார்ப்பதாகவும் இதில் பயணம் செய்பவர்களுக்கு 2 முதல் 12 வயதிகுட்பட்ட குழந்தைகள், 60 வயதுக்கு மேற்பட்ட மலேசிய மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் அரச ஓய்வூதியகாரர்களூக்கு 50 சதவீதம் கட்டண தள்ளுபடியாகவும் 13 வயது முதல் 24 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு 40 சதவீத தள்ளுபடி வழங்க அரசாங்கம் அனுமதித்துள்ளதாக அவர் சொன்னார்.
தற்போது 60 சதவீத எண்ணிக்கையில் பயணிகளின் எண்ணிக்கையை கொண்ட அடிப்படையில் தற்போது அதன் சேவை தொடங்கப்பட்டு பிறகு தேவை அதிகரிக்கும் போது அதன் இருக்கை எண்ணிக்கை உயர்த்தப்படும் என்றார் அவர்.
தற்போது பாதுகாப்பு மற்றும் ஒழுங்கு முறை ஒப்புதளூக்கு உட்பட்டு டிசம்பர் மாத நடுப்பகுதியில் கோம்பாக் மற்றும் கோத்தாபாருவுக்கும் இடையிலான ரயில் பயணம் தொடங்க உள்ளதாகவும் நவம்பர மாத நடுப்பகுதியில் ரயில் பயணத்திற்கான டிக்கெட் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
இதில் திங்கட்கிழமை முதல் வியாழக்கிழமை வரை தினமும் 12 சேவையும் வெள்ளிக்கிழமை சனிக்கிழமை ஞயிற்றுக்கிழை ஆகிய மூன்று நாடுகளுக்கு நாள் ஒன்றக்கு 16 சேவை வழங்கப்படும் என்றார் அவர்.
