
(வி.எம்.சாமி)
சபா மாநிலத்தில் போடப்பட்டு வரும் போர்னியோ நெடுஞ்சாலை இந்த 2026 ஆம் ஆண்டு இறுதிக்குள் மொத்தம் 177 கிலோ மீட்டர் தூரமுள்ள சாலையை கட்டம் கட்டமாக திறக்கப்படும் என்று மாநில துணை முதலமைச்சர் டாக்டர் ஜோக்கிம் குன்சலாம் தெரிவித்தார்.
சாபா போர்னியோ நெடுஞ்சாலை பணிகள் தற்போது 90 முதல் 93முதல் 93 சதவீதம் வரையிலான கட்டுமாணப் பணிகள் முன்னேற்றம் காணப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர் சபாவில் உள்ள பான் போர்னியோ திட்டத்தின் மேலாண்மை நிதி நிர்வாகம் மற்றும் செயலாக்கம் குறித்து பொதுக் கணக்குக் குழு முழுமையாக கண்காணித்து அவ்வப்போது விசாரணை நடத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும் பேசிய அவர் செப்டம்பர் மாத நிலவரப்படி 41.5 கிலோ மீட்டர் தூரமுள்ள எட்டு தொகுப்பு சாலைகள் முழுமையாக முடிக்கப்பட்டதாகவும் இதில் பாப்பாரயும் டோங்கோங்கோனையும், டவாவை செம்போர்னாவையும், லஹாட் டத்து பிற வெளிச்சாலையும் மற்றும் கம்போங் லாட் எம்லிருந்து சண்டகானுல்கான 32யும் இணைக்கும் இதில் அடங்கும் என்றார்.
எது எப்படி இருப்பினும் வரும் டிசம்பர் மாத இறுதியில் சபா போர்னியோ நெடுஞ்சாலை கட்டம் கட்டமாக திறக்கப்படும் என்று துணை முதல்வர் கூறினார்.
