
(வி.எம்.சாமி)
பயணிகளுடன விமானம் தரை இருக்கும் போது விமான இயந்திரத்தில் பறவை மோதப்பட்டு விபத்துக்குள்ளாகி விட்டால் அதற்கான அவசர காலத்தின் போது எவ்வகையில் உதவிக்கரம் நீட்டுவது என்ற ஒத்திகையை சிப்பாங் அனைத்துலக விமான நிலையத்தில் நடைப்பெற்றது.
மலேசிய சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம், மலேசிய அரசு காவல்துறை, மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, மலேசிய குடிமைப் பாதுகாப்பு படை மற்றும் மலேசிய சுகாதார அமைச்ச உட்பட மொத்தம் 24 அரசாங்கம் பொது அமைப்புகள் இந்த ஒத்திகை மீட்புக் குழுவில் இடம் பெற்றனர்.
இந்த ஒத்திகை நிகழ்வை பார்வையிட்ட கே.எல்.ஐ.எ செயல்பாடுகளக்கான மூத்த பொது மேலாளர் அப்துல் ஹஸ்மான் முஹிமிம் அவர்கள் இன்றைய நிகழவில் மாலத்தீவு விமான நிருவனம், ஓமான் விமான நிருவனம், திபா நிருவனம், ஜித்தா விமான நிருவனம் மற்றும் சாங்கி விமான குழுமம் ஆகியவற்றுடன் 5 சர்வதேச விமான நிலையை அமைப்புகள் பங்கேற்றதாக அவர் கூறினார்.
இந்த ஒத்திகையில் 209 பயணிகளுடன் மற்றும் பணியாளர்களுடன் ஒரு விமானம் தரையிறங்கும் போது பறவை மோதியதில் இயந்திரம் சேதமடைந்து ஓடு பாதையில் இருந்து விலகிச் சென்று விபத்துக்குள்ளானது போன்ற ஒரு நிகழ்வாகும்.
இதில் அவசர காலத்தில் எவ்வாறு மீட்பு பணியை செய்வது, உயிரிழப்பு மேலாண்மை, வான்வழி மருத்துவ வெளியேற்றம் அத்துடன் முகாமை இடங்களுக்கு தகவல் தொடர்பு பரிமாற்றம் ஆகியவற்றை துரிதமான செயல்திறன் குறித்து ஒத்திகை நடத்தப்பட்டது.
ஒத்திகைக்கு பிறகு அவர் இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை இதுபோன்ற ஒத்திகை பயிற்சிகள நடத்தப்பட வேண்டும் என்று கூறினார்.
இந்த ஒத்திகையை பார்வையிட கே.எல்.ஐ.ஏ விமான நிலைய மாவட்ட காவல்துறை தலைவர் உதவி ஆணையர் எம்.ரவி அவர்கள் ஒரு சிறந்த முறையிலான ஒத்திகை பயிற்சி என்றார்.
