
(வி.எம்.சாமி)
கூச்சிங் புந்தல் பகுதியில் உள்ள தெலுக் நிபா கடற்கரையில் பகுதியில் 12 அடி நீளமுள்ள முதலை ஒன்று பிடிபட்டுள்ளது.
ஏ.பி.எம்.எனப்படும் குடுமைப் பாதுகாப்பு படையினர், சரவாக் வனவியல் கழகம் மற்றும் நெமோ ஹண்டர் எனப்படும் குழுவினரும் ஒன்றிணைந்து முதலையை பிடிக்கும் நடவடிக்கையில் மேற்கொண்டதாக தி போர்னியோ போஸ்ட் தெரிவித்தது.
இதன் தொடர்பாக உரிமம் பெற்ற முதலை வேட்டைக்காரரான ஜெஃப்ரி சியூ என்பவர் தமது முகநூல் பதிவில் 55 வயதுடைய ஒருவர் தந்த பொதுப் புகார் அடிப்படையில் இந்த முதலை பிடிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
இந்த வெற்றிகாரமான நடவடிக்கையின் வழி சம்பந்தப்பட்ட தனி நபர் பொது மக்களின் பாதுகாப்புக்கான நடவடிக்கைகள் மிக முக்கியம் என்பதை எடுத்துக்காட்டாக உள்ளதாக தெரிவித்தார்.
குறிப்பாக சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள ஆறுகள் மற்றும் கடற்கரை பகுதிகளில் முதலைகளின் அதிகம் இருக்க வாய்ப்பு உள்ளதால் சம்பந்தப்பட்ட பகுதியில் குடியிருக்கும் குடியிருப்பு வாசிகள் மிக எச்சரிக்கையாக இருக்கும் படி நினையூட்டுயதாக தி போர்னியோ போஸ்ட் கூறியது.
