
வி.எம்.சாமி
பந்திங் நகரில் மிகவும் பிரச்சித்திப் பெற்ற பேரங்காடியான எக்கோன்சேவ் முன்புறம் கிளாசிக் பிரியாணி நிறுவனத்தின் ” சாய் லா” எனும் பெயரில் தேனீர் பலகாரம் கடை உதயமானது.
அதிக மக்கள் கூடும் பகுதியாக அங்கு பொது மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய இந்த தேனீர் பலகாரக் கடையை நிறுவியதாக கிளாசிக் பிரியாணி உணவகத்தில் உரிமையாளர் க.ராஜதுரை கூறினார்.
பேரங்காடி பகுதிகளுக்கு வரும் போது அவர்களின் பசியை போக்க தாம் இத்திட்டத்தை முன்வைத்து திறந்ததாக அவர் குறிப்பிட்டார். காலை 8-30 மணி முதல் இரவு 9-00 மணி வரை செயல்படும் இந்த உணவகத்தை அனைத்து இனத்தவர்கள் கவரும் வகையில் செயல்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
