மோரீப் கடற்கரை இனி டத்தாரான் டத்தோ ஸ்ரீ ஹரூன் இட்ரீஸ் என அழைக்கப்படும்

(வி.எம்.சாமி)

 சிலாங்கூர் மாநிலத்தின் கடற்கரை பகுதியை ஒட்டிய பகுதியாகவும் அதிகம் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் இடமான மோரீப் கடற்கரை இனி டத்தாரான் டத்தோ ஸ்ரீ ஹருன் இட்ரிஸ் என பெயர் மாற்றம் காணப்படுவதாக மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அறிவித்தார்.

முன்னாள் சிலாங்கூர் மாநில மந்திரி புசாரும் இந்த மோரீப் சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றிய டத்தோ ஸ்ரீ ஹருன் அவர்களை கௌரவிக்கும் வகையல் இந்த பெயர் மாற்றம் செய்யப்படுவதாக சிலாங்கூர் சுல்தான் கூறினார்.
மோரீப் கடற்கரை பகுதியில் 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி ஏற்பட்ட உயர் கடல் அலை சம்பவம் ஏற்ப்பட்டது. இதனால் மோரீப் கடற்கரை பகுதியில் மண் அரிப்பு மற்றும் போடப்பட்ட தடுப்பு சுவர்கள் சேதமானது. அதனை தொடர்ந்து 60.60 மில்லியன் ரிங்கிட் செலவில் மோரீப் கடற்கரை சுமார் 500 மீட்டர் தூரம் சதுக்கமான பொது மக்கள் சென்று வருவதற்கு ஏதுவாக தரம் உயர்த்தப்பட்டது.
இதன் வழி மோரீப் கடற்கரை பகுதியை மேம்படுத்துவதுடன் சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிகும் பொருட்டு அதன் வசதிகள் மோம்படுதப்பட்டு கடந்த ஜீலை மாதம் 1ஆம் தேதி அதன் மேம்பாட்டு பணிகள் நிறைவு பெற்றது.
அதிகாரப்பூர்வ திறப்பு விழாவில் மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தானுடன் துங்கு பெர்மைசூரி, தெங்கு பெர்மைசூரி நோராஷிகின் மற்றும் சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி உடன் கலந்துக் கொண்டனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular